சுவிஸ்ஸில் இந்தியத்தூதருக்கு வரவேற்பு அளித்த தமிழர்கள்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
123Shares
123Shares
lankasrimarket.com

சுவிஸ்சர்லாந்தில் உள்ள தமிழ் சைவக்கோவிலுக்கு வருகை தந்த இந்திய தூதருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் செந்தமிழ்த் திருமறையில் கருவறையில் வழிபாடு ஆற்றும் சைவத்தமிழ் திருக்கோவில் ஆகும்.

சுவிற்சர்லாந்தின் தலைநகரம் பேர்ன் மாநிலத்தில் தமிழ் நால்வராரம் சமயக்குரவர்கள் கோபுரத்தில் எழுந்து நிற்பது, தமிழுக்கு முதன்மை கொடுப்பதை உணர்விற்பதாகும்.

சைவநெறிக்கூடம் பேர்ன் நகரில் ஐரோப்பாத்திடலில் பல்சமய இல்லத்தின் பங்காளர்கள் ஆவார்கள். ஆகவே பொது அமைப்பின் முறமைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையும் சைவநெறிக்கூடத்திற்கு உண்டு.

06. 04. 2018 வெள்ளிக்கிழமை பல்சமய இல்லத்தில் ஒன்றுகூடிய இந்தியத்தூதரரும், அவர்தம் குழுவினரும் சுவிஸ் வாழ் இந்தியர்களுக்கான ஒன்றுகூடலை நடத்தினார்கள்.

வணக்கம் உணவகத்தில் ஈழத்தமிழ் உணவுகளை தமது விருந்தோம்பலுக்கு இந்தியத் தூதர் பெற்றிருந்தார்.

இக்குழுவினர் சுவிற்சர்லாந்திற்கான இந்தியத்தூதருடன் இரவு 20.30 மணிக்கு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகை அளித்து ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரரை வழிபட்டுச் சென்றனர்.

அருட்சுனையர்கள் மாலை அணிவித்து தூதுவரை மதிப்பளித்தனர்.

இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு எனும் ஐம்பொருளில் எவ்வித விட்டுக்கொடுப்புக்களையும், நெகிழ்ச்சிப்போக்கினையும் கொண்டிராத சைவநெறிக்கூடம், திருக்கோவிலுக்கு வருகை அளிக்கும் அனைவரையும் உலகப்பொது வழக்கு முறையில் வரவேற்பு அளிக்கும் மரபினைப் பேணிவருகிறது.

தலைலாமா முதல் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை, ஏனைய பல் நாட்டுத் தலைவர்வகளும் பல்சமய இல்லம் வருகை அளிக்கும்போது தமிழ்வழிபாட்டுத் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரத்திற்கும் வருகை அளிப்பது வழமை.

இவ்வாறே இந்தியத்தூதருக்கும் வரவேற்பளிக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்