இரட்டைக் குடியுரிமை உடைய தீவிரவாதப் பின்னணி கொண்டவர்களின் குடியுரிமை ரத்து: சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
237Shares
237Shares
lankasrimarket.com

புலம்பெயர்ந்தோருக்கான மாகாண செயலகம் தீவிரவாதப் பின்னணி கொண்ட இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் பலரின் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

தற்போதைக்கு 5 பேரின் சுவிஸ் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக புலம்பெயர்ந்தோருக்கான மாகாண செயலகம் தெரிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் அதிகாரம் மட்டுமே சுவிட்சர்லாந்துக்கு உள்ளது.

இந்நடவடிக்கைகள் ஐ.எஸ் போன்ற தீவிரவாதக் குழுக்களில் சேருவதற்காக சுவிட்சர்லாந்தை விட்டு செல்லும் நபர்கள் மற்றும் பயங்கரமான தீவிரவாதம் தொடர்பான குற்றங்களைச் செய்தவர்களைக் குறி வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் சுவிட்சர்லாந்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் என்று புலம்பெயர்ந்தோருக்கான மாகாண செயலகத்தின் செய்தித் தொடர்பாளரான Katrin Schmitter தெரிவித்தார்.

குறிப்பிட்ட இந்த நபர்கள் சுவிட்சர்லாந்திற்கு வெளியில் உள்ளார்களா அல்லது மீண்டும் திரும்பி வந்துள்ளார்களா என்பதற்கான தகவல் இல்லை. ஃபெடரல் புலனாய்வு சேவையின் கூற்றின்படி 2001 ஆம் ஆண்டிலிருந்து சுவிட்சர்லாந்தை விட்டுச் சென்ற மொத்த 93 பேரில் 20 பேர் தீவிரவாதக் குழுக்களில் இணைவதற்காக சென்றவர்கள் ஆவர்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் சுவிஸ் குடியுரிமை பறிக்கப்பட்ட சுவிஸ்-இத்தாலிய குடியுரிமை கொண்ட ஒரு நபரே, சுவிஸ் குடியுரிமை பறிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். அந்த சம்பவம் அந்த நேரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு அதற்காக சட்டப்பூர்வ விளக்கங்களையும் கொடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுவிஸ்-இத்தாலிய குடியுரிமை கொண்ட அந்த நபர் சிரியாவில் இறந்துபோனதாக பின்னர் தகவல் கிடைத்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்