சுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை கோலாகல திருமணம்?

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் வருகிற செப்டம்படர் மாதம் சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் ’பாஜி ராவ் மஸ்தானி’ எனும் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர், அதன் பின்னர் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பட விழாக்களுக்கு ஒன்றாக கைகோர்த்தபடி ஜோடியாக வலம் வந்த அவர்கள், தாங்கள் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

அதன் பிறகு, வெளிவந்த பத்மாவதி படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் இந்த ஜோடியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் ஜோடியின் திருமணம் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நான்கு திகதிகளை அவர்கள் தெரிவு செய்து வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

நடிகர் ரன்வீர் சிங், சுவிட்சர்லாந்து நாட்டின் இந்திய சுற்றுலா பிரதிநிதியாக உள்ளார். இதன் காரணமாக, இவர்களின் திருமணத்தை சுவிட்சர்லாந்தில் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்