உலகின் சிறந்த பணத்தாளாக தெரிவான சுவிட்சர்லாந்தின் 10-பிராங்க்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
232Shares
232Shares
lankasrimarket.com

தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகின் சிறந்த பணத்தாளாக சுவிட்சர்லாந்தின் 10 பிராங்க் பணத்தாள் தெரிவாகியுள்ளது.

கலை நுணுக்கம் மற்றும் புதுமையான பாதுகாப்பு அம்சங்களுக்காக குறித்த பணத்தாள் உலக அளவில் சிறந்தது என தெரிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு உலக அளவில் 170 நாடுகளில் இருந்து வெளியிடப்பட்ட பணத்தாள்களில் கடும் போட்டியினூடே மிகவும் சிறந்ததாக சுவிஸ் பணத்தாள் தெரிவாகியுள்ளது.

இதன் அடுத்த இடத்தில் ஸ்காட்லாந்தின் 10 பவுண்ட்ஸ் பணத்தாள் உள்ளது.

சுவிட்சர்லாந்தின் புதிய 10 பிராங்க் பணத்தாளானது நாட்டின் நிர்வாக தகுதியை பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளதாக சுவிஸ் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

குறித்த போட்டியில் சுவிஸ் 20 பிராங்க் பணத்தாளும் பங்கேற்றிருந்தது. போட்டியில் பங்கேற்ற ஜூரிகள், சுவிட்சர்லாந்தின் 10 பிராங்க் பணத்தாளை அழகின் உச்சம் என புழந்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் கலை நுணுக்கம் மற்றும் புதுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய குறித்த 10 பிராங்க் பணத்தாளானது பொதுமக்களிடம் புழக்கத்திற்கு முதன் முறையாக விடப்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்டு மாதம் முதல் புதுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 200 பிராங்க் பணத்தாள் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மட்டுமின்றி மிக அதிக மதிப்பு கொண்ட 1,000-franc பணத்தாள் மற்றும் 100-franc பணத்தாள் ஆகியவற்றை 2019 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் விடவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்