சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் இனவெறி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
378Shares
378Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்திலும் இனவெறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

சமீபத்தில் பேருந்து ஓட்டுனர் ஒருவர், அகதிகளை பேருந்தில் ஏற்றிக்கொள்ள மறுத்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏன் எங்களை பேருந்தில் ஏற்ற மறுக்கிறீர்கள் என்று அவர்கள் கேட்டபோது அந்த ஓட்டுனர் “நீங்களெல்லாம் நடந்து போகலாம், உங்களுக்கு சுவிட்சர்லாந்தில் எந்த உரிமையும் இல்லை” என்று கூறியதோடு “ஆப்பிரிக்காவுக்கு திரும்பிப் போங்கள்” என்றும் கத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் அரங்கேறிவரும் இன வெறுப்பு சம்பவங்களுக்கு இது ஒரு உதாரணம்தான். இன்னொரு சம்பவத்தில் பொது நீச்சல் குளம் ஒன்றின் மேலாளர் கருப்பு தோல் உடையவர்கள் குளிக்கக்கூடாது என்று கூறி சுடு தண்ணீரை ஊற்றியிருகிறார்.

அங்குள்ள குளியலறைகளில் அகதிகள் குளிப்பதற்கும், தொல்லை கொடுப்பதற்கும் மட்டுமே வருகிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. Federal Commission against Racism (FCR) மற்றும் Swiss human rights portal human rights ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இச்சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் இதுவரை இல்லாத அளவில் 301 இன வெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய ஆண்டில் 199 இன வெறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான David Mühlemann பல இன வெறுப்பு சம்பவங்கள் புகாரளிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் இன வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்குக் காரணம் பாதிக்கப்படும் மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் புகாரளிப்பதற்கான வசதிகள் அதிகரித்துள்ளது தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஒருவேளை உண்மையிலேயே இன வெறுப்பு சம்பவங்கள் அதிகரித்தும் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு நடந்த இன வெறுப்பு சம்பவங்களில் 112 அந்நிய நாட்டவர்கள் மீதான வெறுப்புடனும், 95 கருப்பின மக்கள் மீதான வெறுப்புடனும், 54 சம்பவங்கள் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புடனும் தொடர்புடையவை ஆகும்.

பெரும்பான்மை சம்பவங்கள் வாய் வார்த்தைகள் மட்டத்திலேயே இருக்க, இரண்டு சம்பவங்களில் மட்டும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

பள்ளிகளில் இன வெறுப்பு காரணமாக குழந்தைகள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் 42 நடந்துள்ளன.

பள்ளி மட்டத்திலேயே நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் இன வெறுப்பு காரணமாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் இன்னும் சுவிட்சர்லாந்தில் சரியான அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்