சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் ஏழை மக்களின் எண்ணிக்கை: வெளியான புள்ளிவிவரம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
187Shares
187Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையை மத்திய புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள எண்ணிக்கையின்படி கடந்த 2016 ஆம் ஆண்டில் சுமார் 615,000 மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த எண்ணிக்கையானது, குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் 140,000 மக்களையும் உட்படுத்தியது எனவும் புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் சிறார்களுடன் வசித்து வரும் ஒற்றை பெற்றோர், தனியாக வசிக்கும் மக்கள் மற்றும் போதிய கல்வி அறிவு இல்லாத மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 6.7 விழுக்காடாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டு 7 விழுக்காடாக அதிகரித்தது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு குறித்த எண்ணிக்கையானது 7.5 என மேலும் அதிகரித்துள்ளது.

மாதம் 2,247 பிராங்க் தொகைக்கும் குறைவாக வருவாய் ஈட்டும் தனி மனிதர் மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட 2 குழந்தைகளுடன் குடியிருக்கும் பெற்றோரது மாத வருவாய் 3,981 பிராங்க் என இருந்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் வரையறுத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் பொருளாதாரம் அசுர வளர்ச்சி பெற்றும் வறுமை நிலை ஆண்டு தோறும் அதிகரித்து வந்துள்ளதாக அரசு புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது என பல்வேறு அமைப்புகள் விமர்சித்துள்ளன.

மட்டுமின்றி சுவிட்சர்லாந்து அரசு உடனடியாக தேசிய அளவில் ஏழ்மை நிலையை ஒழிக்க ஆவன செய்ய வேண்டும் எனவும்,

உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாகாணம் முதல் கம்யூன்கள் வரை திட்டம் வகுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்