சுவிட்சர்லாந்தில் நீண்ட கால வறுமையை பார்ப்பது கடினம்: ஆய்வு தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
251Shares
251Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களுக்கு வறுமை என்பது தற்காலிகமாக வேண்டுமானால் ஏற்படலாம் என்றும் வெறும் 1 சதவிகிதத்தினர் மட்டுமே நிரந்தர வறுமையிலிருப்பதாக கருதப்படுவதாகவும் Swiss Federal Statistics Office (FSO) மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதன்முறையாக FSO, சுவிட்சர்லாந்திலுள்ள மக்கள் எவ்வளவு காலம் வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறியும் நான்காண்டு கால ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

2016 ஆம் ஆண்டில் சுவிஸ் மக்களில் 615,000 பேர் வறுமையால் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இது மக்கள் தொகையில் 7.5% ஆகும், முந்தைய ஆண்டில் இது 7% ஆக இருந்தது.

ஒரு சாதாரண வாழ்வை நடத்தும் அளவுக்கு அடிப்படை பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும் அளவு வசதியில்லாத சூழல் வறுமை என்று வரையறுக்கப்படுகிறது.

2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் எட்டில் ஒருவர் (12.3%) வறுமையில் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. என்றாலும் 0.9% பேர் மட்டுமே தொடர்ந்து நான்கு ஆண்டுகளும் வறுமையில் இருந்தார்கள் என கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி 1.2% பேர் மூன்றாண்டுகளும், 2.5% பேர் இரண்டாண்டுகளும் வறுமையிலிருந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் 7.7% பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட இதே அளவுதான் 2016 ஆம் ஆண்டின் அறிக்கையிலும் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள வறுமைக்கான வரையறையானது Swiss Conference on Social Assistance (SKOS)இன் வழிமுறைகளிலிருந்து தருவிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டின் கணக்கின்படி ஒரு தனிநபரின் மாத வருவாய் 2,247 சுவிஸ் ஃப்ராங்குகளாக கணக்கிடப்பட்டது.

இரண்டு குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் கொண்ட ஒரு குடும்பத்தின் மாத வருவாய் 3,981 சுவிஸ் ஃப்ராங்குகளாக கணக்கிடப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்