அபராதம் செலுத்தாத தூதரக அதிகாரிகள்: தொல்லையில் சுவிஸ் போக்குவரத்து துறை

Report Print Trinity in சுவிற்சர்லாந்து

சுவிஸின் போக்குவரத்துக்கு விதிகளை சரிவர கடைபிடிக்காத வெளிநாட்டு தூதர்கள் மில்லியன் கணக்கில் அபராதம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

பெர்ன் மற்றும் ஜெனீவா போன்ற சுவிஸ் நகரங்களில் வசிக்கும் வெளிநாட்டு தூதர்கள், சுவிஸ் ஃப்ராங்க்களில் லட்சக்கணக்கான ரூபாய்களை பார்க்கிங் மற்றும் மற்ற போக்குவரத்து தொடர்பான அபராதங்களாக செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

The SonntagsZeitung எனும் பத்திரிகை கடந்த ஞாயிறன்று இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2014 மற்றும் 2017 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மட்டும் போக்குவரத்துக்கு விதிகள் மீறியது மட்டும் பார்க்கிங் குற்றத்திற்காக CHF745,000 (764,000 டாலர்கள்) அபராதத் தொகை கட்ட வேண்டி உள்ளது. இதில் CHF141,300 மட்டுமே கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனீவாவில் இன்னும் மோசமாக உள்ளது. அதே காலகட்டத்தில், போக்குவரத்து அபராதம் இங்கு CHF4 மில்லியனை தாண்டிவிட்டது. ஆனால் அதிகாரிகளால் CHF629,000 மட்டுமே சேகரிக்க முடிந்தது.

1961 ஆம் ஆண்டு வியன்னா மாநாட்டின் விதிகளின் கீழ் தூதரகத் தட்டுகளுடன் கூடிய கார்களின் சில விதிவிலக்குகள் கீழ் பயனடைகின்றன.அதுபோன்ற அபராதம் விதிக்கப்படாத வழக்கில், போக்குவரத்து மீறல் அறிவிப்புகள் வழக்கமாக பொலிஸ் நிலையத்திலிருந்து சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

பின் இந்த அறிவிப்பு தூதரகங்கள் நோக்கி செல்லும்.

2010 ல், கேன்டன் பெர்னில் தூதரக போக்குவரத்து அபராதம் 10% மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் கடந்த வருடம் மற்றும் 25 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஜெனீவாவிலோ 20 சேதமாகி இருக்கிறது.

இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என குறித்த சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers