சுவிஸ் வங்கியில் ரகசிய வங்கிக் கணக்கு? சிக்கலில் ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
104Shares
104Shares
ibctamil.com

ஜேம்ஸ் பாண்ட் பட நாயகியாகிய மோனிகா பெலுச்சி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்னும் சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் வரித்துறை உதவி கோரியதையடுத்து சுவிட்சர்லாந்தின் உச்ச நீதிமன்றம் பிரெஞ்சு அதிகாரிகளுக்கு உதவ முன்வந்துள்ளதால் அவருக்கு சிக்கல் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.

54 வயதான இத்தாலிய நடிகையான மோனிகா பெலுச்சி 2011க்கும்2013க்கும் இடையில் பிரான்ஸில் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் தனது தற்போதைய முன்னாள் கணவரான Vincent Casselஉடன் பிரான்ஸில் வாழ்ந்து வந்ததால், தனது சட்டப்பூர்வ வீடு லண்டனில் இருப்பதாக அவர் தெரிவித்ததை பிரான்ஸ் அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

அது மட்டுமின்றி அவருக்கு சுவிஸ் வங்கியில் ரகசிய வங்கிக் கணக்கு இருக்கும் என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது.

2014 முதலே மோனிகா பெலுச்சி வரி ஏய்ப்பு தொடர்பான விமர்சனங்களுக்கு ஆளாகி வந்தார்.

2016ஆம் ஆண்டு அவர் தனது சுவிஸ் வங்கி தகவல்களை பிரான்ஸுக்கு மாற்றுவதை தடுக்குமாறு ஃபெடரல் நிர்வாக நீதிமன்றத்தில் விண்ணப்பித்து அதில் வெற்றியும் பெற்றார்.

சுவிஸ் வரித்துறை அதிகாரிகள் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். இதனால் மோனிகா பெலுச்சி வழக்கை ஃபெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்.

பிரெஞ்சு அதிகாரிகள் இந்த வழக்கை தொடர்ந்திருக்கவே கூடாது என்று கூறியுள்ள மோனிகா பெலுச்சியின் பிரெஞ்சு வழக்கறிஞரான Marc Vaslin, இது பிரெஞ்சு குடிமகள் ஒருவர் சுவிஸ் நாட்டில் பணத்தை மறைத்து வைப்பதைக் குறித்ததே அல்ல, ஏனென்றால் மோனிகா பெலுச்சி பிரெஞ்சுக் குடிமகளே அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்