சுவிஸ் கோடீஸ்வரருக்கு 4 மில்லியன் பிராங்குகள் அபராதம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
219Shares
219Shares
ibctamil.com

சுவிஸ் கோடீஸ்வரர் ஒருவரின் கலையார்வம் அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

சுமார் 200 கலைப்பொருட்களை சுவிட்சர்லாந்துக்கு இறக்குமதி செய்ததை அவர் முறைப்படி அறிவிக்காமல் விட்டதாகக் கூறி அவருக்கு சுவிஸ் நீதிமன்றம் ஒன்று 4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்துள்ளது.

Urs Schwarzenbach சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர பைனான்சியர். கலைப் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட Schwarzenbach சூரிச்சிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் சொந்தக்காரர்.

சுவிஸ் சுங்கத்துறை அதிகாரிகள், அவர் இறக்குமதி செய்த கலைப்பொருட்களைப்பற்றி சரியாக அறிவிக்கவில்லை அல்லது வரி விவரங்களை அளிக்கும்போது அவற்றின் மதிப்பை அவர் குறைத்துக் கூறியுள்ளார் என்றும் இதனால் அவர் 10 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் சுங்க வரியைத் தவிர்த்து விட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Keystone

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள Schwarzenbach இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளார்.

அதேபோல் பல நூறு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புள்ள 10,000 கலைப்பொருட்கள் தன்னிடம் இருப்பதாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.

சூரிச் விமான நிலையத்தில் 300,000 சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புள்ள ஒரு ஓவியம் மற்றும் 11,3000 சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்புள்ள பழங்கால யானை சிலை ஒன்று ஆகியவற்றுடன் பிடிபட்ட Schwarzenbach அவற்றைக் குறித்து முறைப்படி சுங்க அதிகாரிகளிடம் அறிவிக்க தவறி விட்டார்.

நேரத்தை வீணடிக்காமல் இருப்பதற்காகவே அவ்வாறு செய்ததாக அதற்கு அவர் காரணம் கூறினார்.

இதற்காக அவர் 10 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் சுங்க வரி கட்ட வேண்டும் என்றும் 4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்த Schwarzenbach தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்