தீவிரவாதிகளுடன் தொடர்பு: நீதிமன்றத்தில் ஆஜராகும் சுவிஸ் சகோதரர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
143Shares
143Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் விண்டர்தார் நகரில் குடியிருக்கும் சகோதரர்கள் இருவர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு காரணமாக நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

விண்டர்தார் பகுதியில் குடியிருந்து வரும் இரு சகோதரர்கள் தொடர்பில் சுவிஸ் விசாரணை அதிகாரிகள் பல ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

குறித்த சகோதரர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றோருக்கு தெரியாமல் துருக்கி வழியாக சிரியாவுக்கு சென்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளனர்.

இதனிடையே தமது மகன்கள் மாயமானது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்த அவர்களது தந்தை, துருக்கி எல்லைப்பகுதியிலும் தீவிரமாக தேடியுள்ளார்.

ஆனால் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி இருவரும் ஒன்றாக விண்டர்தார் திரும்பியுள்ளனர்.

குறித்த தகவலானது அப்போது சுவிஸ் முழுவதும் தலைப்புச் செய்தியானது.

இந்த நிலையில் குறித்த சகோதரர்கள் தொடர்பில் நடைபெற்று வந்த நீதிமன்ற விசாரணையானது மே மாத துவக்கத்தில் முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சகோதரர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி விசாரணை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்