உலக நாடுகளில் கல்வியில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
369Shares
369Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் உயர் கல்வி அமைப்பு மீண்டும் ஒருமுறை உலக நாடுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உயர் கல்வி அமைப்பிற்கான Universitas 21 என்னும் அமைப்பின் தர வரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உயர் கல்வி அமைப்பில் சிறந்து விளங்கும் 50 நாடுகளின் பட்டியலை Universitas 21 என்னும் அமைப்பு மே மாதம் 11 ஆம் திகதி (நேற்றைய தினம்) வெளியிட்டது.

இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த அமெரிக்காவுக்கும் மூன்றாமிடத்தைப் பிடித்த பிரித்தானியாவுக்கும் இடையில் சுவிட்சர்லாந்து வந்துள்ளது.

2015 ஆம் ஆண்டிலிருந்து இரண்டாமிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள சுவிட்சர்லாந்து தற்போது மீண்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதன் அண்டை நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி முறையே 15, 16 மற்றும் 28ஆவது இடத்தைப் பிடித்துள்ளன. ஆஸ்திரியா 11 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

உயர் கல்விப் பிரிவின் பலமே அதன் வியாபாரத்திற்கும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் உள்ள இணைப்புதான்.

தனி நபர் கணக்கின்படி PhD முடிப்பவர்களின் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடிக்கிறது, இவர்களில் பாதிபேர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

கற்கும் சாதனங்கள் மற்றும் முறையான இணைப்பிலிருத்தல் ஆகிய இரண்டிற்காகவும் சுவிட்சர்லாந்துக்கு முதலிடமும், தரமான மாணவர்களை உருவாக்குவதில் நான்காவது இடமும் கல்வியிடச் சூழலுக்காக 11ஆவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாகவே சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்கள் அவற்றின் சர்வதேசத் தரம் வாய்ந்த தோற்றம், புதுமைகளுக்கு கொடுக்கப்படும் இடம், அதிக வெளி நாட்டு மாணவர்கள் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்