டெஸ்லா கார் விபத்துக்கான காரணங்கள் என்ன? தீயணைப்புப் படையினர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
174Shares
174Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் Ticino பகுதியில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதிய டெஸ்லா கார் ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் ஜேர்மனியைச் சேர்ந்த 48 வயது ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சமீப நாட்களாக டெஸ்லா கார்கள் பல இதுபோன்ற விபத்துக்களை சந்தித்து வருகின்றன. டெஸ்லா கார்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் திடீரென கடுமையாக சூடாவதால் தீப்பிடித்திருக்கலாம் என்று Ticino தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.

லித்தியம் பேட்டரிகள் சில நேரங்களில் திடீரென வெப்பம் அதிகரித்து ஒரு சங்கிலித் தொடர் வினை போல செயல்பட்டு முழு பேட்டரியையும், அத்துடன் முழுக் காரையும் அழித்துவிடலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இச்சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகவும், எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் விபத்து தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுக்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்