சிறுவர்களுக்கான உதவியை திடீரென்று நிறுத்திய சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
460Shares
460Shares
ibctamil.com

சிறுவர் நலனுக்காக நாடு முழுவதும் வழங்கப்பட்டுவரும் உதவித்தொகையை நிறுத்த முடிவு செய்துள்ள சுவிட்சர்லாந்து அரசு, இனி உள்ளூர் நிர்வாகமே சிறுவர் நலனைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நேற்று தெரிவித்தது.

கடந்த 15 ஆண்டுகளாக சிறுவர்கள் நலனுக்கான, அளவுக்கதிகமான தேவைகளை சந்திப்பதற்காக சுவிஸ் அரசு 350 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை இதுவரை செலவிட்டுள்ளது.

உதவியை நிறுத்த வேண்டாம் என்று அறிவியல், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான கமிஷன் பரிந்துரை செய்தும் உள் விவகார அமைச்சகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் இத்திட்டம் புதுப்பிக்கப்படுமா இல்லையா என்பதை சுவிஸ் நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும்.

உலகிலேயே அதிக செலவு பிடிக்கும் சிறுவர் நலத் திட்டங்கள் சுவிட்சர்லாந்தில்தான் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின், பள்ளிக்கு செல்லும் வயதுள்ள மற்றும் அதற்கு குறைவான வயதுடைய 20 சதவிகிதம் சிறுவர்களை கவனிக்க இயலாத நிலைமை சுவிட்சர்லாந்தில் காணப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்