பயங்கர விபத்தில் சிக்கிய சுவிஸ் குடும்பம்: காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுலா சென்ற சுவிஸ் குடும்பம் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியதில் 9 மாத குழந்தை மட்டும் உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செவ்வாய் அன்று நடந்த இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான காரில் இருந்து 9 மாத குழந்தையானது தூக்கி வீசப்பட்டுள்ளது.

பேருந்து ஒன்றை இடைமறித்து செல்கையில் இந்த விபத்து நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விபத்தில் சம்பவயிடத்திலேயே குழந்தையின் தந்தை இறந்துள்ளதாகவும், தாயார் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின்போது தூக்கி வீசப்பட்ட குழந்தையானது கால் முறிவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தாயார் விபத்தில் இறந்துள்ள நிலையில், குறித்த குழந்தைக்கு தாய்ப்பால் தேவை எனவும், எவரேனும் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பால் தந்து உதவுமாறு அவரது உறவினர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்