சுவிஸில் 4 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பெண்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் காப்பாளரான பெண் ஒருவர் 4 வயது குழந்தையை தொடர்ந்து 3 ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் லாசன்னே குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில் குறித்த குழந்தைகள் காப்பாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

38 வயதான பிரேசில் நாட்டவரான பெண்மணியே குறித்த குற்றச்சாட்டில் சிக்கியவர். தொடர்ந்து 3 ஆண்டுகள் வாரத்தில் பலமுறை பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி பாதிக்கப்பட்ட சிறுவனை குறித்த சம்பவம் வெளியே தெரிவிக்காமல் இருக்கவும் மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பான வகுப்பின் போது குறித்த சிறுவன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளான்.

இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தவும், நீதிமன்றம் குறித்த குழந்தைகள் காப்பாளரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

சுமார் 90 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்த குறித்த பெண்மணி, விசாரணைக்கு பின்னர் 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக 15,000 பிராங்க்ஸ் தொகை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...