கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
109Shares

ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் கப்பல் திருவிழாவான செவ்வாய்க்கிழமை இரவு கப்பல் வாகனத்தில் கதிர்வேலர் வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவத்தில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பகல் திருவிழாவில் தாமரை தடாக வாகனத்தில் வலம் வந்த கதிர்வேலர் மாலைத்திருவிழாவில் கப்பல் வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மகோற்சவகாலத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சப்பறத்தில் வெளிவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கும் கதிர்வேலர் மறுநாள் சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு சித்திரத்தேரில் பவனிவர இருக்கிறார்.

விசேட இசைநிகழச்சி

மகோற்சவ விசேட இசைநிகழ்ச்சித் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிளாவிலைச் சேர்ந்த சிறார்களின் இசைநிகழ்ச்சி இடம்பெற்றது.

நான்காம் திருவிழாவான திங்கட்கிழமை இரவு செல்வி அர்ச்சனா அற்புதராஜாவின் இசைக்கச்சேரி இடம்பெற்றது.

தவில்வித்துவான் இராமலிங்கம் நாகேந்திரனின் தவில்வாத்தியம் சகிதம் அவரது கச்சேரி இடம்பெற்றது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்