சுவிட்சர்லாந்தில் முறைகேடில் ஈடுபட்ட ஜேர்மானிய தாயார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
179Shares
179Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் ஜேர்மானிய தாயார் ஒருவர் முறைகேடாக அரசின் ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை அனுபவித்து வந்த விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வருபவர் 42 வயதான ஜேர்மானிய தாயார்.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான இவர் முறைகேடாக அரசு ஊக்கத்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை அனுபவித்து வந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணமானதால், இவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப Zurzach மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தாயாருக்கு ஏற்கெனவே ஊதியம் பெறும் அளவுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் குறித்த தகவலை மறைத்து அரசு ஊக்கத்தொகையை பெற்று வந்துள்ளார்.

தமக்கு தாற்காலிக வேலை இருப்பதை அரசுக்கு தெரிவிக்காதது தமது குற்றமே என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மட்டுமின்றி அதற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி 42 வயதான குறித்த தாயார் மீது ஏற்கெனவே சுவிட்சர்லாந்தில் 5 குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

முறைகேடில் ஈடுபட்டதாக கூறப்பட்ட வழக்கில் 3000 பிராங்க்ஸ் அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகள் தடை விதித்து மாகாண பரிந்துரைக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் அந்த தாயார் ஜேர்மனிக்கே திரும்பிச் செல்லும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்