சுவிஸ் மலையுச்சியில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் 130 பேர் மீட்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
129Shares
129Shares
ibctamil.com

கேபிள் கார் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Titilis மலைப் பகுதியில் சிக்கிக் கொண்ட 130க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனால் வழக்கமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கேபிள் கார் இயக்குபவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

போக்குவரத்தை சரி செய்வதற்கு, Engelberg ரிசார்ட் அருகில் பழுது பார்க்கும் வேலை அதிகம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Titilis மலைப் பகுதி உலகின் முதல் சுழலும் கேபிள் கார் பயன்பாட்டில் உள்ள இடமாகும்.

Keystone

தினமும் இங்கு 3000 சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். Engelberg மற்றும் Titlis ஆகியவை சர்வதேச சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் பிரபலமான சுற்றுலாத்தலங்களாகும்.

இந்தியர்கள் அதிகம்பேர் இவ்விடங்களுக்கு விரும்பி வருகை தருகிறார்கள். தற்போதைய கோளாறின் காரணமாக 200.000 சுவிஸ் ஃப்ராங்குகள் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கேபிள் கார் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று காரணமாக ஆண்டில் ஐந்து நாட்கள் கேபிள் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கமான ஒரு நிகழ்வாகிவிட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்