லேசர் தொழில் நுட்பத்திற்காக விருது பெற்ற சுவிஸ் இயற்பியலாளர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
78Shares
78Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளரான Ursula Kellerக்கு லேசர் தொழில் நுட்பம் குறித்த ஆய்வுக்காக European Inventor Award என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

Ultra-fast laser தொழில் நுட்பத்தில் செய்த பணிக்காக, வாழ் நாள் சாதனையாளர் பிரிவில் அவ்விருது The European Patent Office (EPO) என்னும் அமைப்பால் Ursula Kellerக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாரீஸுக்கு அருகிலுள்ள Saint-Germain-en-Laye என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Ursula Keller தற்போது சூரிச்சின் Federal Institute of Technology (ETH Zurich)இலுள்ள Institute for Quantum Electronics என்னும் நிறுவனத்தில் துறைத்தலைவராக உள்ளார்.

தனது 30 வருட பணிக்காலத்தில் அவர் தொழில்துறை மற்றும் மருத்துவத் துறையில் அதி வேக லேசர்களை சாதாரணமாக பயன்படுத்த உதவும் வகையிலான பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார்.

அவரது கண்டுபிடிப்புகளில் லேசர் கதிர்களை உருவாக்க உதவும் SESAM என்னும் பகுதி கடத்தும் நிறைவுற்ற உட்கிரகிக்கும் ஆடி மிக பிரபலமானது.

மருத்துவத் துறை உட்பட பல துறைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக ரீதியான அதி வேக லேசர்களில் இந்த SESAM கோட்பாடு பெரிதும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்