உலக கிண்ண கால்பந்து பயிற்சி ஆட்டம்: சுவிட்சர்லாந்து, ஜேர்மனி அணிகள் வெற்றி

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
126Shares
126Shares
ibctamil.com

உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான பயிற்சி ஆட்டங்களில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

21–வது உலக கிண்ண கால்பந்து போட்டி வருகிற 14–ம் திகதி ரஷ்யாவில் தொடங்கும் நிலையில் இதில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

இதில் ஜேர்மனியில் உள்ள லிவெர்குசென் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஜேர்மனி மற்றும் சவுதி அரேபிய அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் ஜேர்மனி அணி 2–1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தி வெற்றி கண்டது.

அதே போல சுவிட்சர்லாந்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி ஜப்பானுடன் மோதியது.

இப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்