கடும் வாக்குவாதம்: மூதாட்டியை அடித்தேக் கொன்ற சுவிஸ் இளம்பெண்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
370Shares
370Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்குச்சண்டையில் மூதாட்டி ஒருவர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் Affoltern பகுதியில் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி இரு பெண்கள் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது சில நிமிடங்களில் கைகளால் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதில் 79 வயது மூதாட்டி கடுமையாக தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். மட்டுமின்றி சம்பவம் நடந்த 3-வது நாள் குறித்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்த சூரிச் நகர பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில், சம்பவத்தன்று இருவரும் கடுமையாக தாக்கிக்கொள்ளும் முன்னர் Zehntenhausplatz ரயில் நிலையத்தில் வைத்து இருவரும் சுமார் ஒருமணி நேரம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பெர்ன் மாகாணத்தில் குடியிருக்கும் 30 வயது பெண்மணியை கடந்த வியாழனன்று பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் ரயில் நிலையத்தில் இருவரையும் பார்த்த பொதுமக்கள் தங்களுக்கு தெரியவரும் தகவலை பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்