சூரிச் நகரில் துப்பாக்கிச் சூடு: 65 வயது முதியவர் கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
143Shares
143Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 65 வயது முதியவர் ஒருவர் 60 வயது முதியவர் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரிச் நகரின் Schwamendingen பகுதியில் நேற்றைய தினம் மாலையில் குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த அந்த நபரை மீட்ட பொலிசார் மருத்துவமனையில் அவசரப் பிரிவில் சேர்ப்பித்துள்ளனர்.

Schwamendingen பகுதியில் குடியிருக்கும் குறித்த இரு முதியவர்களுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.

இதனால் இருவரும் தொடர்ந்து வாய்த்தகராறிலும் சமயங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த 65 வயது முதியவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சுடத்துவங்கியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய 65 வயது நபர் Schwamendingen பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த 4 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.

முன்னாள் ஊர்காவல் படை ஒன்றில் பணியாற்றிய அவர் அப்பகுதியில் குடியிருக்கும் பலருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மட்டுமின்றி அந்த குடியிருப்பு வளாகத்திலேயே மிகவும் தொல்லை பிடித்த நபர் என கூறப்படும் அவரை அங்கிருந்து வெளியேற்ற குடியிருப்புவாசிகள் முயற்சித்தும், நிர்வகம் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே அந்த குடியிருப்பில் துப்புரவு சேவை செய்துவரும் 60 வயது நபர் மீது அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச்சூடு தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த சூரிச் நகர பொலிசார், உடனடியாக அந்த நபரை கைது செய்துள்ளதுடன், துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

தமது குடியிருப்பில் புகுந்து களவு செய்ய முயற்சித்ததாலையே தாம் துப்பாக்கியால் சுட்டதாக அந்த நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொள்ளை நடந்ததற்கான எந்த ஆதாரமும் பொலிசார் விசாரணையில் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்