சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் கும்பல்: எச்சரிக்கும் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
126Shares
126Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் காதல் வலைவீசி சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் கும்பல் மீது பெற்றோர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் Loverboys கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்துவருவதாக கூறும் தேசிய ஆலோசனை குழு,

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த Loverboys கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமூக வலைதளங்கள் வாயிலாக அறிமுகமாகும் இந்த கும்பல், சிறுமிகளை மட்டுமே குறிவைப்பதாகவும் தேசிய ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.

கவர்ச்சிகரமான பேச்சில் சிறுமிகளை வீழ்த்தும் இந்த கும்பல், பின்னர் அவர்களை காதல் வலையில் சிக்க வைக்கிறது.

தொடர்ந்து படுக்கை அறைவரை நீளும் இந்த விவகாரம் பின்னர் கொடூரமாக தாக்குவதும், மிரட்டுவதும் என மாறுகிறது.

முடிவில் முகம் தெரியாத நபர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்துவதுடன், அந்த வீடியோக்களை வைத்து தொடர்ந்து மிரட்டி பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தி வருவதும் அம்பலமாகியுள்ளது.

இதில் சில சிறுமிகள் கர்ப்பமான பின்னரே பெற்றோருக்கு இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வருகிறது எனவும் தேசிய ஆலோசனை குழு உறுப்பினர்கள் எச்சரிக்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற சம்பவம் தற்போது அதிகரித்து வருவதாகவும், இதுவரை புகார் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கை என்பது மிக மிக குறைவாக இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல பெற்றோரும் அவர்களது இளம் வயது பிள்ளைகளும் Loverboy கலாச்சாரம் தொடர்பில் எந்த விடயமும் அறிந்திருக்கவில்லை என்பதே இந்த சிக்கல்களுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்