சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 2 மில்லியனுக்கும் அதிகம் என புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் தற்காப்புக்காக பயன்படுத்தும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை சுமார் 2,332,000 என தெரிய வந்துள்ளது.

இது அங்குள்ள 100 பேருக்கு 27.6 என கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து 16-வது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனம் ஒன்றே குறித்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

குறித்த பட்டியலில் ராணுவ சேவை முடிந்த பின்னர் தங்கள் பாதுகாப்புக்காக உரிய முறைப்படி துப்பாக்கிகளை கைவசம் வைத்திருப்போரும் இடம்பெற்றுள்ளனர்.

மட்டுமின்றி சுவிட்சர்லாந்தில் சுமார் 1,540,281 சட்டத்துக்கு புறம்பான அல்லது உரிய முறைப்படி பதிவு செய்யப்படாத துப்பாக்கிகளும் புழக்கத்தில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் ஒரு பில்லியன் எண்ணிக்கையில் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாகவும் அதில் 857 மில்லியன் துப்பாக்கிகள் பொதுமக்கள் தங்கள் தற்காப்புக்கு என வைத்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ராணுவத்திடம் சுமார் 133 மில்லியன் துப்பாக்கிகளும் பொலிஸாரிடம் சுமார் 23 மில்லியன் துப்பாக்கிகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் சுமார் 393 மில்லியன் எண்ணிக்கையில் புழக்கத்தில் உள்ளது.

இது குறித்த பட்டியலில் அடுத்துள்ள 25 நாடுகளின் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மொத்த துப்பாக்கிகளின் எண்ணிக்கையாகும்.

அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் யேமன் நாடு உள்ளது. இங்கு 100 பேருக்கு 52.8 எண்ணிக்கையில் துப்பாக்கிகள் பயன்பாட்டில் உள்ளது.

நார்வே நாட்டில் இந்த எண்ணிக்கை 28.8 எனவும் மால்டாவில் 28.3 எனவும் உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers