இளம்பெண்ணை மிரட்டி 40 முறை துஷ்பிரோயகம் செய்த சுவிஸ் நபர்: வெளியான பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
499Shares
499Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் காதல் வலையில் விழ வைத்து இளம்பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த நபர் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் குடியிருந்து வரும் வட ஆப்பிரிக்க இளம்பெண் ஒருவர் மீது சுவிஸ் நபர் காதல் வயப்பட்டுள்ளார்.

சமூக வலைதளம் வாயிலாக அறிமுகமான இருவரும் ஒரு கட்டத்தில் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு குறித்த பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன் பின்னரே தமது வாழ்க்கையில் நரக வேதனை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது மனைவி என்றும் பாராமல் அந்த நபர் தொடர்ந்து பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

வாரத்தில் 4 முறை கூட பாலியல் உறவுக்கு நிர்பந்தித்த நாட்களும் உண்டு எனக் கூறும் அவர், அவருடன் இருந்த அந்த குறுகிய காலகட்டத்தில் சுமார் 40 முறை வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சித்திரவதையில் இருந்து தப்பிக்க விவாகரத்து முடிவை மேற்கொண்ட அந்த இளம்பெண்,

நீதிமன்றத்தின் உதவியுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விவாகரத்து பெற்றதுடன், அவர் இனிமேல் இவரை சந்திக்க கூடாது என்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குறித்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது தண்டனை காலத்தை முடித்து வெளியே வந்த அவர் மீண்டும் தமது முன்னாள் மனைவியை பிந்தொடர துவங்கியுள்ளதாக அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இதனிடையே தமது மகளின் பாஸ்போர்ட்டை அவர் கைப்பற்றி வைத்துள்ளதாகவும், இதனால் தமக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து சொந்த நாட்டிற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்