பர்தா அணிய தடை தொடர்பான பிரச்சினைக்கு சுவிஸ் அரசின் தீர்வு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
171Shares
171Shares
lankasrimarket.com

நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பர்தா அணிவதற்கு தடை விதிப்பது தொடர்பாக கொண்டுவரப்பட்ட initiative தொடர்பான பிரச்சனைக்கு சுவிஸ் அரசு தீர்வு ஒன்றைக் கண்டுள்ளது.

உள்ளூர் வழக்கம், சீதோஷ்ணம் மற்றும் உடல் நல, பாதுகாப்பு காரணங்கள் தவிர வேறு காரணங்களுக்காக பொது இடத்தில் முகத்தை மறைக்கும் வகையில் பர்தா போன்ற உடைகளை அணிவது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் எனக் கோரும் initiativeக்கு ஆதரவாக 100,000 கையெழுத்துகள் பெறப்பட்டன.

அந்த initiativeவை நிராகரித்துள்ள சுவிஸ் அரசு, அதற்கு மாற்றாக வேறு யோசனைகளை முன் வைத்துள்ளது.

முகத்தை மறைப்பது பிரச்சனைக்குரியது என்பதை அறிந்துள்ளதாகக் கூறும் அரசு, மொத்தத்தில் நாடு முழுவதும் பர்தா அணிவதற்கு தடை விதிப்பதற்கு பதிலாக தவறு நடக்கும் இடங்களில் மட்டும் நடவடிக்கை எடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, பெண்களை பர்தா அணியும்படி வற்புறுத்துபவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.

எந்தெந்த இடங்களில் அதிகாரிகள் கோரும்போது முகத்தைக் காட்ட வேண்டும் என்பது குறித்த தெளிவான சட்டங்களையும் இயற்ற விரும்புவதாக அரசு தெரிவித்துள்ளது.

அதுபோல தேவைப்படும் இடத்தில் அதிகாரிகளிடம் தங்கள் முகத்தை காட்டாதவர்களுக்கு அபராதம் விதிப்பதும் இந்த சட்டத்தில் அடங்கும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்