ஆசிய நாட்டவர்களுக்கு இடம் இல்லை: இனவெறி புகாரில் சிக்கிய சூரிச் பல்கலைக்கழகம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
460Shares
460Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் செயல்பட்டுவரும் புகழ்பெற்ற ETH பல்கலைக்கழகம் இனவெறி தாக்குதல் புகாறில் சிக்கியுள்ளது.

ETH பல்கலைக்கழக வளாகத்தில் இனவெறியை தூண்டும் வாசகங்களும், பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்தும் லிப்ட் கதவில் ஆசிய நாட்டவர்களுக்கு இடம் இல்லை என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி ஆசிய மாணவர்களின் இருக்கைகளில் ஆபாச சித்திரங்களை வரைந்தும், வாசகங்களை எழுதியும் வைத்துள்ளனர்.

ஆனால் ஆசிய நாட்டவர்கள் மீதான இந்த இனவெறி தாக்குதல் சம்பவத்தை ஆதரிப்பது தொடர்பில் மாணவர்களிடையே இருவேறு கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது.

குறித்த நடவ்டிக்கையில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வெண்டும் என மாணவர்களில் ஒரு சாரரும்,

இதை அப்படியே விட்டுவிடலாம், கண்டுகொள்ள வேண்டாம் என ஒரு சாரரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் புகார் அளிக்கும் வகையில் சில மாணவர்கள் பொலிசாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

இதேவேளையில் பல்கலைக்கழக துணைவேந்தர் சாரா ஸ்பிரிங்மேன் ஒட்டுமொத்த மாணவர்களுடன் அவசர கூட்டத்தை கூட்டி எச்சரித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் மரியாதையை பேணிக்காக்க தவறியவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அவர் மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி பல்கலைக்கழகத்தில் இனப் பாகுபாடு, பாலியல் துன்புறுத்தல், கொடுமைப்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் உள்ளிட்ட எவையும் நிர்வாகத்தால் சகித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து இனவெறியை தூண்டும் வாசகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்