சுவிட்சர்லாந்தில் 5000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
82Shares
82Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் Valais பகுதியில் 5000 ஆண்டுகள் பழமையான dolmen என்னும் கல் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Valais பகுதியில் நிலத்தடி வாகன நிறுத்தம் ஒன்றைக் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டும்போது 5000 ஆண்டுகள் பழமையான megalithic காலகட்டத்தைச் சேர்ந்த dolmen என்னும் கல் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தத்திற்கான அஸ்திபாரம் தோண்டும்போது பல டன் எடையுள்ள பெரிய கற்பலகைகள் பலவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தார்கள்.

அவை நூற்றுக்கணக்கான உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல் கல்லறையின் ஒரு பாகமாகும்.

இன்னும் நுணுக்கமாக அவை எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை அறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆராய்ச்சியாளர்கள் அவற்றில் ஏதேனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளனவா என்றும் மனித உடல்களின் பாகங்கள் இன்னும் உள்ளனவா அல்லது La Sionne நதியில் வெள்ளம் ஏற்பட்டபோது அடித்துச் செல்லப்பட்டு விட்டனவா என்றும் ஆராய உள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்