சுவிஸில் உள்ள கறுப்புப்பணம் குறித்த தகவல்கள் பெறப்படும்: இந்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
34Shares
34Shares
lankasrimarket.com

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் முன்பை விட அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், 2019 இறுதிக்குள் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம் என இந்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் உள்ள Schweizerische National Bank, இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் Deposit செய்துள்ள பணம் குறித்த தகவல்களை வெளியிட்டது.

அதில், கடந்த 2016ஆம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு(இந்திய மதிப்பில் ரூ.7,000) மேல் இந்தியர்கள் Deposit செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், இந்த தரவுகள் பரபரப்பை ஏற்படுத்தியதால், பல விமர்சனங்கள் அரசு மீது முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பான இந்திய மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், ‘2019 நிதியாண்டு இறுதிக்குள் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு முறைகேடாக பணம் அனுப்பியவர்கள், வங்கியில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை பெற்றுவிடுவோம்.

இந்தியா-சுவிட்சர்லாந்து அரசுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 2018 ஜனவரி 1ஆம் திகதி முதல் நிதியாண்டின் இறுதி வரை எல்லா தகவல்களும் நாள் பெறுவதற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்