சுவிட்சர்லாந்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 3 பெண்கள் சிரியாவில் கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
87Shares
87Shares
lankasrimarket.com

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான ஒரு குழந்தை உள்ளிட்ட 3 சுவிஸ் பெண்களை சிரியா ராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை சுவிஸ் வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.

சிரியா ராணுவத்திடம் சிக்கிய 3 பெண்களில் இருவர் வடமேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Biel பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து போராட சிரியா சென்றவர்கள் என கூறப்படுகிறது.

29 வயதான 3-வது பெண்மணி லாசன்னே பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவர் தமது கணவருடன் 2015 ஆம் ஆண்டு சிரியா சென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் வகுத்து பின்னர் கைதாகி சமீபத்தில் நாடுகடத்தப்பட்ட கொலம்பிய நாட்டு பெண்மணியுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான ஒரு பெண்மணிக்கு ஒரு வயதில் குழந்தை இருப்பதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சுவதாக அவரது உறவினர்கள் சுவிட்சர்லாது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் குர்து படைகளின் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் சுமார் 1,600 பெண்கள் அவர்களின் பிள்ளைகளுடன் அந்த முகாம்களில் கடந்த ஓராண்டாக விசாரணையை எதிர்நோக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சுவிஸ் அதிகாரிகளுக்கு தாகவல் கிடைத்துள்ளதாகவும், ஆனால் யார் யார் என்ற தகவல்களை தற்போது வெளியிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்