சுவிட்சர்லாந்தில் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இன்னொரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்போரின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டிலிருந்து 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் வசிக்கும் 916,000 குடிமக்களுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளது.

மேலும் வெளிநாட்டில் வசிக்கும் 560,000 பேர் இன்னொரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள்.

ஆக, மொத்தத்தில் சுவிஸ் குடிமக்களில் குறைந்தது ஐந்தில் ஒருவர் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கிறார்.

ஞாயிறன்று வெளியான அந்த செய்தியில் இதற்கு காரணம் அதிகரித்து வரும் புலம்பெயர்தல்தான் என்று கூறப்பட்டுள்ளது.

அதிக மக்கள் நாட்டுக்கு போக்கும் வரத்துமாக இருப்பதன் விளைவாக வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மணம் புரிவதும், அதன் விளைவாக இரண்டு நாடுகளின் குடியுரிமை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நிகழ்கிறது.

குறைந்தபட்சம் ஆண்டொன்றிற்கு 40,000பேர் சுவிட்சர்லாந்து குடியுரிமை பெறுகிறார்கள்.

இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் அரசியல், பொலிஸ் துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படையில் பங்கேற்க அனுமதி உண்டு.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தை ஆளும் ஏழு உறுப்பினர் ஃபெடரல் கவுன்சில் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்போருக்கு முக்கிய பதவிகள் வழங்காமல் விலக்குவதற்கான தேவையை தள்ளுபடி செய்தது.

அவர்களுக்கும் சாதாரண சுவிஸ் குடிமக்களுக்குள்ள அதே கடமைகள் இருக்கின்றன, ஆனால் ராணுவ சேவை என்று வரும்போதுமட்டும் அதை எங்கே செய்வது என்பதை அவர்கள் தேர்வு செய்யலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers