சுவிஸ் வங்கியில் அதிகளவு பணம் டெபாசிட் செய்த நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் பிரித்தானியா

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து வங்கிகளில் அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்த நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளில் உள்ள பில்லியனர்கள், மில்லியனர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் என பலர் தங்களது பணத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள வங்களில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுவிஸ் தேசிய வங்கியானது, இதுவரை டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில், எந்தெந்த நாடுகள் உள்ளன என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பிரித்தானியா முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் உள்ளன. இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் கறுப்புப் பணம் 50 சதவிதம் அதிகரித்ததால், இந்தியா 15 இடங்கள் முன்னேறி 73வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் 10 நாடுகளின் பட்டியல்
  • பிரித்தானியா
  • அமெரிக்கா
  • மேற்கிந்திய தீவுகள்
  • பிரான்ஸ்
  • பஹாமாஸ்
  • ஜேர்மனி
  • குயெர்ன்சி
  • ஜெர்சி
  • ஹாங்காங்
  • லக்செம்பர்க்

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers