சுவிட்சர்லாந்தில் கேபிள் கார் விபத்து: நான்கு பேர் காயம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
103Shares
103Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் பெர்ன் பகுதியில் கேபிள் கார் விபத்தொன்றில் நான்கு பேர் காயமடைந்தனர்.

சுவிட்சர்லாந்தின் Kandertal பள்ளத்தாக்கில் கேபிள் கார் ஒன்றின் கேபிள் ஒயர் அறுந்ததில் அதில் பயணம் செய்த ஐந்து பேரில் நால்வர் காயமடைந்தனர்.

ஒருவர் காயங்களின்றி தப்ப, மூன்று பெண்களும் இன்னொரு ஆணும் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர். மீட்பு பணியில் மூன்று ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரு பெண்கள் வீடு திரும்பிய நிலையில் மற்ற இருவர் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும் அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் பயன்படுத்திய கேபிள் கார், பொருட்களை கொண்டு போவதற்காக பயன்படுத்தப்படும் கார் என்றும் மனிதர்கள் பயணிக்கும் கார் அல்ல என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்