சுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட பேய் மழை: பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
337Shares
337Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டித் தீர்ப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் பல பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.

குறிப்பாக Romandie மற்றும் Jura மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சூரிச் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தின் கட்டிடம் ஒன்றில் மின்னல் தாக்கியதாகவும், ஆனால் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெர்ன் மாகாணம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடி மற்றும் மின்னலுக்கு வாய்ப்புள்ளதால் கவனமுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி Aargau, Nidwalden, Obwalden, Zurich, Basellandschaft மற்றும் Solothurn உள்ளிட்ட மாகாணங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்