அகதி மாணவர்களை குறைத்து மதிப்பிடும் ஆசிரியர்கள்: ஆய்வு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
252Shares
252Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து ஆசிரியர்கள் அகதிப் பின்னணி கொண்ட மாணவர்களை மிகக் குறைத்து மதிப்பிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

Applied Sciences and Arts Northwestern (FHNW) பல்கலைக்கழகம் மேற்கொண்ட SCALA என்னும் ஆய்வின் ஆசிரியரான Markus Neuenschwander தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், சுவிட்சர்லாந்து ஆசிரியர்கள் அகதிப் பின்னணி கொண்ட மாணவர்கள்குறித்து மிக குறைவான எதிர்பார்ப்புகளையே கொண்டிருப்பதாகவும், கணிதத்தைப் பொறுத்தவரையில்கூட மற்ற மாணவர்களைப் போன்ற முடிவுகளையே அவர்கள் காட்டினாலும்கூட அவர்கள் குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஜேர்மன் வகுப்புகள் இன்னும் மோசம், அந்த ஆசிரியர்கள் அகதி மாணவர்களை இன்னும் மோசமாக மதிப்பிடுகிறார்கள்.

ஆய்வின் முடிவுகள் ஒரு விடயத்தை தெளிவாகக் காட்டுவதாகக் கூறுகிறார் Neuenschwander, அது: அகதிக் குழந்தைகள் குறித்து ஆசிரியர்கள்ஏற்கனவே மனதில் கொண்டிருக்கும் தவறான எண்ணம்.

குறைத்து மதிப்பிடுதல், குறைந்த பல்னையே கொடுக்கும் என்கிறார் சூரிச் கல்வியியல் ஆய்வாளர் Katharina Maag.

Neuenschwanderஐப் பொறுத்தவரையில், ஆய்வின் முடிவுகள் ஒரு விடயத்தை தெளிவாகக் காட்டுகின்றன, அது என்னவெனில், அகதி மாணவர்கள் குறித்த தவறான எண்ணங்களை கேள்வி கேட்கும் வகையில் ஆசிரியர்களுக்கு இன்னும் பயிற்சியளிக்கப்பட வேண்டும்.

தாங்கள் முன்கூட்டியே தவறான எண்ணங்கள் கொண்டிருக்கிறோம் என்பதே பல ஆசிரியர்களுக்கு தெரியவில்லை என்கிறார் Neuenschwander.

இதற்கிடையில் சுவிஸ் கல்வி அமைப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதுமான அறிவு இல்லாததால், பெரும்பாலான அகதிகளின் பிள்ளைகள் தோல்வியடைவதாக 15,000 மாணவர்களிடையே கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்