சுவிட்சர்லாந்தில் ஏரிக்குள் மூழ்கி மரணமடைந்த பிரபல இசைக்கலைஞர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
118Shares
118Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் ஏரிக்குள் மூழ்கி மரணமடைந்த அமெரிக்க இளைஞர் வளர்ந்துவரும் இசைக்கலைஞர் என்ற தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் Burgseeli அருகே ஏரிக்குள் மூழ்கி சமீபத்தில் மரணமடைந்த 13 வயது சிறுவன் அமெரிக்காவில் வளர்ந்துவரும் பியானோ இசைக்கலைஞர் என தெரியவந்துள்ளது.

ஏரியில் மூழ்கிய சிறுவனை துரிதமாக செயல்பட்டு மீட்ட பொலிசார், உடனடியாக ஹெலிகொப்டர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தை சேர்ந்த Albert Yin என்ற அந்த சிறுவன் வளர்ந்துவரும் பியானோ இசைக்கலைஞர் எனவும் ஹொக்கி வீரர் எனவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு கோடை காலமும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்துவதை தொடர்ந்து செய்து வருகின்றனர் Albert Yin குடும்பத்தினர்.

இந்த ஆண்டு இத்தாலியில் இசை நிகழ்ச்சி மேற்கொள்ள முடிவு செய்து, அதற்கு முன்னதாக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

சிறுவன் ஆல்பர்ட் யின் மரணமடைவதற்கும் ஒருநாள் முன்பு சுவிட்சர்லாந்தின் Lucerne நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்