சுவிஸ் நாட்டவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு படையெடுக்கிறார்கள்: ஆய்வு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
235Shares
235Shares
lankasrimarket.com

சுவிஸ் நாட்டவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு பறக்கிறார்கள்? காதலுக்காகவா, வேலைக்காகவா, அல்லது சாகச செயல்கள் புரிவதற்காகவா?

வெளிநாடுகளில் வசிக்கும், வேலைபார்க்கும் சுவிஸ் நாட்டவர்களை ஏழு வகையாக வகைப்படுத்தலாம் என சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் சுவிஸ் நாட்டவர்களில் 18 சதவிகிதத்தினர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக சென்றவர்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் சுவிஸ் நாட்டவர்களில் 13 சதவிகிதத்தினர் வேலை தொடர்பான விடயங்களுக்காக செல்பவர்கள், இவர்கள் தங்கள் நேரத்தில் பெரும்பான்மையை வேலைக்காகவே செலவிடுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் (16%) தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் அனுப்புவதால் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள். சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் சொந்த நாடு திரும்புவதையே இவர்கள் விரும்புகிறார்கள்.

புதிய இடங்களை காண்பதில் ஆர்வமுடையவர்கள் என்னும் ஒரு கூட்டத்தார் 13%, இவர்கள் வெளிநாடுகளில் குடியமர்வதில் சமர்த்தர்கள்.

அடுத்தபடியான வகையினர் காதலுக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் (14%), இவர்கள் உள்ளூர்வாசிகளுடன் எளிதில் நட்பாகி விடுபவர்கள்.

தனது துணைவருடன் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் (6%), இவர்கள் தாங்கள் சென்ற நாட்டில் மனப்பூர்வமாக வசிக்க இயலாமல் திணறுவதோடு சரியான வேலை வாய்ப்பையும் பெற்றுக்கொள்வதில்லை.

கடைசியாக 4 சதவிகிதத்தினர் மாணவர்கள், இவர்கள் உள்ளூர் மொழியை நன்கு கற்று சரளமாக பேசக்கூடியவர்கள். இந்த ஆய்வு 187 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வாழும் 18,000பேரிடம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்