தேசிய தின வான வேடிக்கைகளை ரத்து செய்த சுவிஸ் நகரம்: நெகிழ்ச்சிக் காரணம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
229Shares
229Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் Arosa நகரம் தனது தேசிய தினக் கொண்டாட்டாங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது, இதற்கு காரணம் ஒரு கரடியாகும்.

கடந்த வாரம் செர்பிய சர்க்கஸ் கரடியாகிய Napa, 1400 கிலோமீற்றர்கள் பயணித்து சுவிட்சர்லாந்துக்கு வந்தது.

விரைவில் திறக்கப்பட இருக்கும் Arosa கரடிகள் காப்பகத்திற்கு வருகை தந்துள்ள ஒரே மற்றும் முதல் கரடி Napaதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காப்பகம், முன்பு மோசமான சூழலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கரடிகளை இயற்கைச் சூழலோடு ஒத்துப் போவதற்கு பழக அனுமதிக்கும் ஒரு இடமாகும்.

Napa‘s sunday view 🐻🏔☀️ #arosabärenland #arosabearsanctuary

A post shared by Arosa Bärenland (@arosabaerenland) on

ஐந்து கரடிகளை பாதுகாக்க இங்கு இடவசதி உள்ளது. ஆகஸ்டு மாதம் 3ஆம் திகதி சுற்றுச்சூழல் அமைச்சர் Doris Leuthard முன்னிலையில் இந்த புதிய கரடிகள் காப்பகம் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 1ஆம் திகதி நடைபெற இருக்கும் தேசிய தினக் கொண்டாட்டங்களில் ஒரு முக்கியமான மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக வந்துள்ள கரடியைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக தேசிய தினக் கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வான வான வேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்ய நகர கவுன்சில் முடிவு செய்துள்ளது.

சொல்லப்போனால் இந்த ஆண்டு மட்டுமின்றி அடுத்த ஆண்டும் கூட வான வேடிக்கைகள் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இதனால் நகரவாசிகளில் சிலர் வருத்தமடைந்துள்ளனர், வான வேடிக்கைகள் தேசிய தினத்தின் ஒரு பகுதி, இப்போதுதான் இந்தக் கரடி இங்கு வந்துள்ளது, அதனால் மற்ற விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்கிறார் நகரவாசி ஒருவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்