உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்துக்கு பின்னடைவு: காரணம் இதுதான்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

உலக அளவில் அமைதியான நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பத்திரிகை மற்றும் பொருளியல் மற்றும் அமைதி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய நிறுவனமும் இணைந்து உலகின் அமைதியான நாடுகள் தொடர்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதில் கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து இந்த ஆண்டு 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இராணுவமயமாக்கல் துறையில் சுவிட்சர்லாந்தின் மோசமான மதிப்பீடு எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி சமீப காலமாக சுவிட்சர்லாந்தில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு ராணுவ தளவாட ஏற்றுமதி அதிகரிப்பும் பின்னடைவை தந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தையும் சர்வதேச பார்வையாளர்கள் ஒப்பீடு செய்யத் துவங்கியுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வு முடிவில் ஐஸ்லாந்து நாடு இந்தமுறையும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் அடுத்த இடங்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா உள்ளது.

மிகவும் அமையான நாடுகள் பட்டியலின் கடைசி இடங்களில் தென் சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா உள்ளது.

சர்வதேச அளவில் 91 நாடுகளின் அமைதி சீர்கெட்டு வருவதாகவும், கடந்த ஆண்டைவிடவும் 71 நாடுகள் அமைதி வழியில் முன்னேறியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வானது சர்வதேச அளவில் 163 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்