சுவிட்சர்லாந்தில் ஆலய மணி ரிப்பேர்: மாணவிகள் கொடுத்த மாற்று யோசனை

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Lucerneஇல் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் ஆலயப் பராமரிப்பு பணி காரணமாக ஆலய மணியை ரிப்பேர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆலய பராமரிப்பு பணிகளில் Lucerne பல்கலைக்கழக மாணவர்களை ஈடுபடுத்த ஆலய நிர்வாகம் முடிவு செய்தது.

ஆலய மணி சில நாட்களாக ஒலிக்காத நிலையில் அதற்கு மாற்றாக மொபைல் ரிங் டோனை பயன்படுத்தலாமே என இரண்டு மாணவிகள் ஜோக்கடிக்க, அதையே சீரியஸாக எடுத்துக் கொண்ட நிர்வாகம் அந்த மாணவிகளிடமே அந்த வேலையை ஒப்படைத்தது.

Klarissa Flückiger மற்றும் Mahtola Wittmer என்னும் அந்த இரண்டு மாணவிகளும் திங்கட்கிழமை மொபைல் ரிங் டோனை ஒலிபரப்பும் அமைப்பை பொருத்தினர். மொபைல் ஒலியை ஒரு லவுட் ஸ்பீக்கர் சத்தமாக ஒலிக்கச் செய்யும்.

இதனால் இனி ஆலய மணி ஒலிப்பதற்கு பதிலாக மொபைல் ரிங் டோன் ஒலிக்கும். இந்த நிலை ஜூலை 30 வரை தொடரும்.

ஆலய மணிக்கு பதிலாக இனி மொபைல் ஒலிக்கும் என்றாலும் இரவு நேரங்களில் ரிங் டோன் ஒலிக்க அனுமதி இல்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்