சுவிட்சர்லாந்தை புறக்கணிக்கும் புகலிடம் கோருவோர்: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் முதல் பாதியை விடவும் இந்த ஆண்டு 14.3 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு ஜூன் வரையான காலகட்டத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7,820 என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த 2017 ஆம் ஆண்டின் ஜூன் வரையான காலகட்டத்தை ஒப்பிடுகையில் சுமார் 14.3 விழுக்காடு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி ஜூன் மாதம் மட்டும் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது கடும் சரிவை சந்தித்துள்ளதாகவும், அது சுமார் 23.7 விழுக்காடு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் புகலிடம் கோருவோர் சுவிட்சர்லாந்தை புறக்கணித்து வேறு ஐரோப்பிய நாடுகளை அணுகுவதாக கருத்து வெளியானது.

ஆனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளிலும் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையானது கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையானது குறிப்பிடும் அளவுக்கு மாறவில்லை என கூறப்படுகிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள 1,246 பேரில் 222 பேர் எரித்திரியா நாட்டவர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் 122 பேர், சிரியா(112), ஜார்ஜியா(101), மற்றும் இலங்கை நாட்டவர்கள் 71 பேர்.

இதில் இலங்கையில் இருந்து புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15 பேர் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜூன் இறுதி வரை விண்ணப்பித்துள்ளவர்களில் சுமார் 972 பேரின் கோரிக்கையை பரிசீலித்து இந்த ஆண்டு இறுதிக்குள் குடியுரிமை வழங்க ஆவன செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்