சுவிஸில் அதிகரித்த வெப்பநிலை: உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்த அணுமின் நிலையம்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அதிகளவு வெப்பநிலை நிலவுவதால், Mühleberg-யில் இயங்கும் அணுசக்தி உற்பத்தி நிலையமானது தங்களது உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளது.

சுவிஸில் 154 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதுடன், காட்டுத்தீ அபாயமும் அதிகரித்துள்ளது. ஆறுகளிலும், ஏரிகளிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

இந்நிலையில், Mühleberg நகரில் இயங்கி வரும் அணுசக்தி உற்பத்தி நிலையம், அங்குள்ள Aar நதியின் வெப்பம் அதிகரிப்பதால் அணுசக்தி உற்பத்தியை 10 சதவிதத்திற்கும் அதிகமான அளவில் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Aar நதியின் வெப்பநிலை 20.5 டிகிரி செல்சியஸிற்கும் மேல் அதிகரித்தால், இந்த அணுசக்தி நிலையம் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்ற வகையில் சட்டம் உள்ளது. இதற்கு முன்பும் கடந்த ஜூலை 5ஆம் திகதி பாதுகாப்பு கருதி, இந்த அணுசக்தி நிலையமானது உற்பத்தியை குறைத்தது.

இந்நிலையில், 89 சதவித அளவில் உலைகளில் ஆற்றல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mühleberg அணுசக்தி உற்பத்தி நிலையத்திற்கு அருகில் உள்ள Beznau நகரிலுள்ள மற்றொரு அணுசக்தி உற்பத்தி நிலையம் வழக்கம்போல் இயங்குகிறது. எனினும், Aar நதியின் வெப்பநிலை 32 செல்சியஸ் உயர்ந்தபோது இந்த நிலையமும் உற்பத்தியை குறைத்தது.

கடந்த 1972ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் Mühleberg அணுசக்தி உற்பத்தி நிலையம், அடுத்த ஆண்டு டிசம்பரில் மூடப்படும் என்று கூறப்படுக்கிறது.

Fabrice Caffrini/AFP

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்