சுவிஸ் காவல்துறையை திணறடித்த வழக்கு: இறுதியில் பொலிசார் எடுத்த அதிரடி முடிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வாலெய்ஸ் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் சிக்கிய நபரால் காவல்துறையே திணறி வருகிறது.

வாலெய்ஸ் மாகாணத்தின் குறிப்பிட்ட பகுதியில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

அவரை காவல் நிலையத்தில் அழைத்து வந்த பொலிசார் அவர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபரிடம் அடையாள அட்டைகளோ, உரிய ஆவணங்களோ எதுவும் இல்லை என விசாரணையில் தெரியவந்தது.

மட்டுமின்றி குறித்த நபர் பொலிஸ் விசாரணையில் ஒரு வார்த்தை கூட பேசவும் மறுத்து வந்துள்ளார்.

அவரது விரல் அடையாளங்களை பதிவு செய்து ஆய்வு மேற்கொண்ட பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனையடுத்து பொதுமக்களின் உதவிய கோரிய பொலிசாருக்கு ஏராளமான தகவல்கள் கிடைக்கப்பெற்றது.

ஆனால் அவை அனைத்தும் குறித்த மனிதர் தொடர்பில் உறுதியான ஒரு தகவலை பொலிசாருக்கு தருவதாக அமையவில்லை.

நீண்ட 7 நாட்கள் தொடர்ந்த விசாரணையில் பொலிசாருக்கு ஒரே ஒரு தகவல் மட்டுமே கிடைத்துள்ளது.

அதாவது அந்த மனிதர் இத்தாலியில் இருந்துள்ளதாக பொலிசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த மனிதருக்கு சில நூறு பிராங்குகள் பணத்தை அளித்து அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த நபர் இத்தாலி நகருக்கு திரும்பச் செல்வார் என நம்புவதாக வாலெய்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் காவலில் இருந்த அந்த நாட்களில் அவருக்கு மருத்துவ உதவியும், போதிய உணவும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், குறித்த மனிதர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சுவிஸ் பொலிசாருக்கு அந்த மனிதர் யார் என்பது குறித்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்