20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கை தீர்த்த சுவிஸ் கணித மேதை: கிடைத்த கௌரவம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
553Shares
553Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் ETH Zurich instituteஐச் சேர்ந்த கணிதவியலாளரான Alessio Figalli, 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு கணக்கை தீர்க்க உதவியவராவர்.

கணிதத்துறையில் அவர் புரிந்த சாதனைகளுக்காக கணிதத்துறையின் உயரிய விருதான Fields Medal என்னும் விருது வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

பிரேசிலில் நேற்று நடைபெற்ற சர்வதேச கணிதவியலாளர்களின் மாநாட்டில் அவருக்கு இந்த உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.

Optimal transport கோட்பாடு மற்றும் அதன் பயன்பாடு ஆகிய பகுதிகளில் Figalliயின் பங்களிப்பிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக சர்வதேச கணிதவியல் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய Alessio Figalli, பல ஆண்டுகளாக பல கணிதவியலாளர்களால் தீர்க்க இயலாத ஒரு விடயத்தை தீர்த்ததில் மிக்க மகிழ்ச்சி, திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு கணிதம் எவ்வளவு ஆக்கப்பூர்வமானதும் ஆர்வத்தைத் தூண்டுவதுமாக உள்ளது என்பதைக் காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் Fields Medal என்னும் இந்த விருது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

சுவிஸ் நாட்டின் சார்பில் Fields Medalஐ பெற்றுக்கொண்டாலும் Alessio Figalli இத்தாலியைப் பூர்வமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்