ஏரிக்கடியில் ரயில் பாதை: சுவிஸ் மாணவன் முன்வைத்துள்ள திட்டம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவாவையும் லாசேனையும் இணைக்கும் தண்ணீருக்கடியில் நிர்மாணிக்கப்படும் ரயில் பாதை திட்டம் ஒன்றை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் முன் வைத்துள்ளார்.

செயல்படுத்தப்பட்டால் மணிக்கு 500 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில் லாசேனிலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்களுக்குள் ஜெனீவாவை அடையும்.

இத்தகைய ரயில் செல்ல வேண்டுமானால் அதற்காக அமைக்கப்படும் சுரங்கப்பாதை 15 மீற்றர்கள் அகலம் கொண்டதாகவும் தண்ணீருக்கடியில் அமைக்கப்பட்ட காங்கிரீட் தூண்களின்மீது தண்ணீர்ப் பரப்பிலிருந்து 30 மீற்றர்கள் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தை முன்வைத்துள்ள பொறியியல் மாணவரான Elia Notari கூறும்போது கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் தாக்குப்பிடிக்கக்கூடிய விதத்தில் தனது திட்டத்தை வடிவமைத்துள்ளதாகக் கூறுகிறார்.

இத்திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படக்கூடிய ஒன்றுதான் என்கிறார் Notariயின் பேராசிரியரான Aurelio Muttoni.

தண்ணீருக்கடியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை 14.5 மீற்றர் அகலமுடையதாகவும் நில நடுக்கங்கள், சுரங்கப்பாதைக்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் வெடி விபத்துகள், பெரு வெள்ளம், சுனாமி மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றை தாக்குப்பிடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Notari முன்வைத்துள்ள திட்டம் நல்ல திட்டம்தான் என்றாலும் அது அதிக செலவு பிடிக்கக்கூடியது, மட்டுமின்றி அது லாபகரமாக இயங்கும் என்று உறுதியாகக் கூறுவதற்கும் வாய்ப்பில்லை.

எனவே ஜேர்மனி, நார்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் ஆய்வில் இருந்தாலும் சுவிட்சர்லாந்தில் இப்போதைக்கு நடைமுறைக்கு வராது என்றே தோன்றுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்