சுவிட்சர்லாந்தில் நாய்களுக்கு காலணிகள்: புதிய கட்டுப்பாடு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

வெப்பநிலை அதிகரித்துள்ளதையடுத்து நாய்களின் பாதங்களை வெயிலிலிருந்து காக்கும் நோக்கில் சூரிச் நகர பொலிசார், நாய் வைத்திருப்பவர்கள் அவைகளுக்கு ஷூக்கள் வாங்கி அணிவிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

சூரிச் பொலிசார் "Hot Dog campaign" என்னும் திட்டத்தை தொடங்கி தங்கள் நாய்களை கடும் வெப்பத்திலிருந்து எவ்வாறு காப்பது என்று பொது மக்களுக்கு கற்பித்து வருகின்றனர்.

இந்த ஜூலை முதல், 30 டிகிரி வாக்கிலேயே வெப்பநிலையைக் கொண்டுள்ள சுவிட்சர்லாந்தில் இது அதிக வெப்பமான கோடைக்காலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெப்பநிலை 30 டிகிரியாக இருந்தாலும் தரையில் 50 முதல் 55 டிகிரி போல உணரப்படும், இதனால் நாய்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

நாய்கள் இந்த வெப்பநிலையில் தரையில் நடப்பது மனிதர்கள் வெறுங்காலுடன் தரையில் நடப்பதற்கு சமம் என்று கூறியுள்ள பொலிசார், அதனால் அதன் பாதங்கள் வெந்து போகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்கள் தங்கள் நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது தரை சூடாக இருக்கிறதா என்று உறுதி செய்து விட்டு அவற்றை அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல் நாய்களை காருக்குள் அடைத்து வைக்க வேண்டாம் என்றும், அவற்றிற்கு போதுமான தண்ணீர் வழங்குமாறும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers