ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அகதிகள் குறித்த சுவிஸ் படம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உலகம் முழுவதும் பேசப்படும் பிரச்சினையான அகதிகள் பிரச்சினை தொடர்பாக சுவிஸ் இயக்குநர் ஒருவர் இயக்கியுள்ள திரைப்படம் ஒன்று சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்னும் பிரிவில் போட்டியிடுவதற்காக முன் வைக்கப்பட்டுள்ளது.

Markus Imhoof என்னும் சுவிஸ் இயக்குநர் இயக்கியுள்ள Eldorado என்னும் திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்னும் பிரிவில் போட்டியிடுவதற்காக Academy of Motion Picture Arts and Sciencesக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது இயக்குநர் தத்தெடுத்த ஒரு 14 வயது அகதிச் சிறுமியின் பார்வையில் தற்போதைய அகதிகள் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதை போட்டிக்கு அனுப்புவதற்கு தேர்வு செய்த ஐவர் குழு நடுவர்களில் ஒருவர், Eldorado அதிர்ச்சியளிக்கும் ஒரு திரைப்படம், அதை கவனிக்காமல் விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பாவை அடைய மத்திய தரைக்கடலில் அபாயகரமான பயணத்தை மேற்கொள்ளும் அகதிகளைக் குறித்த திரைப்படம் Eldorado. இந்த படத்தை எடுப்பதற்காக Markus ஒரு ஆண்டு மீட்பு படகுகளிலும் அகதிகள் முகாமிலும் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Academy of Motion Picture Arts and Sciences, சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்னும் பிரிவில் போட்டியிடுவதற்கான படங்களை 2019ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி முடிவு செய்யும்.

பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்சில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்