ஒசாமாவின் தண்டனையை உறுதி செய்த சுவிஸ் உச்சநீதிமன்றம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த ஈராக்கியர் ஒருவரின் தண்டனையை சுவிஸ் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

சுவிஸ் ஃபெடரல் குற்றவியல் நீதிமன்றம் ஒசாமா.M என்னும் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.

சுவிட்சர்லாந்தில் ஒரு ஐ. எஸ் செல்லை நிறுவி, தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அவர் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ததையடுத்து அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் ஓராண்டாகக் குறைத்தது.

ஒசாமா குற்றவியல் நீதிமன்றம் தனது குற்றங்களை தீவிரமானவை என தவறாக வகைப்படுத்தி விட்டதாகக் கூறி மீண்டும் மேல் முறையீடு செய்தார்.

தனது வழக்கு விசாரணையின்போது பாதுகாப்புக்காக ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததால், தான் குற்றவாளி என ஊடகங்கள் தவறாகக் கருதி விட்டதாக தெரிவித்திருந்தார்.

மீண்டும் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வாதங்களை நிராகரித்ததோடு குறைக்கப்பட்டிருந்த மூன்று ஆண்டுகள் எட்டு மாதங்கள் தண்டனையை மீண்டும் உறுதி செய்துள்ளது.

ஒசாமாவுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை முறைப்படிதான் வழங்கப்பட்டிருந்தது என்றும், ஊடகங்கள் எந்த அளவுக்கு அவரது வழக்கை பாதித்தது என்பதை அவர் விளக்கிக்காட்ட தவறி விட்டதாகவும் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் அரசு வழக்கறிஞர்கள் அளித்த வாதங்களை பொது மக்களுக்கு சரியாக வழங்கும் விதத்திலேயே ஊடகங்கள் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு தீவிரவாத அமைப்பு ஒன்றில் இணைந்த ஒசாமா, சிரிய போரில் பாதிக்கப்பட்ட ஒருவர் போல ஏமாற்றி சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியது தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி சுவிட்சர்லாதிற்கு வந்த பின்னும் சமூக ஊடகங்களில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் வீடியோக்களை அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers