சுவிஸ்ஸில் திருமண மோதிரத்தை தொலைத்த இளைஞரை தேடும் பொலிஸ்: சுவாரசிய காரணம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் திருமண மோதிரத்தை தொலைத்த இளைஞர் ஒருவரை தேடி வருவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

சூரிச் நகர பொலிசார் புதனன்று அங்குள்ள ஏரியில் தொலைந்துபோன வளையல் ஒன்றை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பொலிசாருக்கு திருமண மோதிரம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் 22.08.15 என பொறிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சூரிச் பொலிசார் தங்களது பேஸ்புக் பக்கத்தில், அடுத்த வாரம் தங்களது திருமண நாளை கொண்டாடவிருக்கும் அந்த நபரை கண்டுபிடித்துவிடுவோம் என நம்புவதாக பதிவிட்டுள்ளனர்.

பொலிசார் வசமுள்ள அந்த திருமண மோதிரமானது அடுத்த இரண்டு வாரத்திற்கு தங்களது அலுவலகத்தில் பத்திரப்படுத்தப்படும் எனவும், அதன் பின்னர் சுவிட்சர்லாந்தில் தொலைந்துபோன பொருட்கள் பாதுகாக்கப்படும் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த திருமண மோதிரம் தொடர்பில் இதுவரை அதன் உரிமையாளர் தங்களை தொடர்புகொள்ளவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்